ரசிகைகளின் கனவுக்கண்ணனுக்கு இன்று பிறந்தநாள்.. பல கோடி சொத்து மதிப்பு! யார் அந்த நடிகர் தெரியுமா?
முன்னணி நடிகர்
மலையாள சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு இந்தியா சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டுயிருக்கும் இவர், தனது திரை வாழ்க்கையை மிகவும் தாமதமாகத்தான் தொடங்கியுள்ளார்.
சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் கால் பதித்த இவர், மலையாளத்தில் வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானார்.
மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர் பட்டாளத்தை விரிவு படுத்தினார்.
இப்பொழுது தமிழ் ரசிகர்கள் மலையாள படங்களை விரும்பி பார்க்கின்ற நிலையில். இவர் நடித்து மலையாளத்தில் வெளி வந்த பெங்களூர் டேஸ், களி, சார்லி போன்ற படங்களை கொண்டாடி தீர்த்துள்ளனர்.
பிறந்தநாள்
இவ்வாறு மலையாளம், தமிழ், ஹிந்தி என தனது நடிப்பு திறமை மூலம் திரையுலகில் கலக்கி கொண்டுயிருக்கும் இவர் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
அது வேறு யாரும் இல்லை ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துல்கர் சல்மான் தான். இவர் நடிகர் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ. 60 கோடி சொத்துக்கு இவர் சொந்தக்காரர் என தகவல் வெளியாகியுள்ளது.