செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்... 5 நாள் வசூல் விவரம்
காந்தா படம்
இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா.
கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடிக்க சமுத்திரக்கனி, ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வெபரேர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
1950 காலகட்டத்தில் திரை துறையினர் இடையே நடக்கும் சில காரசாரமான நிகழ்வுகளை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான சுவாரஸ்யமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகளவில் இப்படம் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
துல்கரின் நடிப்பில் அசத்தலாக தயாராகியுள்ள இப்படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 29 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் நாளுக்கு நாள் வசூலில் அதிகரித்து வருகிறது.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan