அவருடன் என்னை ஒப்பிடாதீங்க.. அது இன்சல்ட்: கோபமாக பேசிய துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தான் அதிகம் படங்கள் நடித்து வருகிறார். அவர் நடித்த சீதா ராமம் படம் தற்போது தெலுங்கு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது.
அதனால் துல்கர் சல்மானுக்கு தற்போது ஹிந்தியிலும் மார்க்கெட் வர தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் சீதா ராமம் படத்தை ஷாருக் கானின் வீர் ஜாரா படத்துடன் ஒப்பிட்டு பலரும் பேசுவது பற்றி துல்கர் பதில் அளித்து இருக்கிறார்.

இது அவருக்கு இன்சல்ட்..
"நான் ஷாருக்கானின் பெரிய ரசிகன். அவர் எல்லோருக்கும் ரோல் மாடல். அவர் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம், பெண்களை நடத்தும் விதம் பார்த்து வியந்த இருக்கிறேன். அவரது படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன்."
"DDLJ படத்தை தியேட்டரில் பல முறை சகோதரி உடன் பார்த்திருக்கிறேன். அது என்னுடையா பேவரைட் படம்."
"என்னுடைய நடிப்பில் அவரது influence இருக்கலாம். என்னை அறியாமலேயே அது என்னிடம் இருக்கிறது. என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை இன்சல்ட் செல்வது போல ஆகும். ஏனென்றால் எப்போதும் ஒரே ஷாருக் கான் தான்."
இவ்வாறு துல்கர் கூறி இருக்கிறார்.

முடியப்போகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்? எதிர்பார்க்காத ஒரு ப்ரொமோ இதோ