Dunki படத்தின் முதல் விமர்சனம்.. ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா ஷாருக்கான்

By Kathick Dec 11, 2023 12:30 PM GMT
Report

ஷாருக்கான் 

இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் இதுவரை இரு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முதலில் வெளிவந்த பதான், அதன்பின் வெளிவந்த ஜவான் என தொடர்ந்து இரு வெற்றிகளை சொந்தமாக்கியுள்ளார்.

இந்த இரு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள Dunki எனும் திரைப்படம் வருகிற 22ஆம் தேதி வெளிவரவுள்ளது.

Dunki படத்தின் முதல் விமர்சனம்.. ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா ஷாருக்கான் | Dunki Movie First Review

ராஜ்குமார் இரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து விக்கி கவுஷல், டாப்ஸி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராஜ்குமார் இரானி இயக்கத்தில் இதுவரை 3 இடியட்ஸ், பி கே, சஞ்சு, முன்னா பாய் போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.

நயன்தாராவின் உண்மையான முகம் இதுதானா.. வைரலாகும் வீடியோ

நயன்தாராவின் உண்மையான முகம் இதுதானா.. வைரலாகும் வீடியோ

Dunki முதல் விமர்சனம்

இந்நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, Dunki படத்தை பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்றும், ஏற்கனவே ராஜ்குமார் இரானி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த 'பி கே' படத்தை விட இப்படம் நன்றாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Dunki படத்தின் முதல் விமர்சனம்.. ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா ஷாருக்கான் | Dunki Movie First Review

கண்டிப்பாக Dunki திரைப்படம் ஒரு எமோஷனல் ப்ளாக் பஸ்டர் படமாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் ராஜ்குமார் இரானியின் சிறந்த படைப்புகளில் ஒன்று என்பதையும் இந்த விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர். 

முதல் விமர்சனம் இப்படி வைத்துள்ள நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் பதான், ஜவான் படங்களை தொடர்ந்து Dunki மூலம் ஹாட்ரிக் வெற்றி கொடுக்கிறாரா என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US