ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படம்!! ப்ரீ புக்கிங் விவரம் இதோ
‘டங்கி’
இந்திய சினிமாவில் தென்னிந்திய படங்கள் அதிகம் கவனம் பெற்று வந்த நிலையில் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் போன்ற படங்கள், சரிவில் இருந்த பாலிவுட்டை காப்பாற்றியது.
கமர்சியல் ஆக்ஷன் ஜானரில் நடித்து வந்த ஷாருக்கான், தற்போது வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகியுள்ள ‘டங்கி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
ப்ரீ புக்கிங்
டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘டங்கி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. அதில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் ரூ 10 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் படங்கள் என்றாலே ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் ஆனால் இந்த படத்திற்கு ப்ரீ புக்கிங்கில் அவ்ளோ வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.