எனக்கு கனவு போல இருந்தது.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த துஷாரா விஜயன்!!
துஷாரா விஜயன்
அநீதி, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை துஷாரா விஜயன்.
இந்த படங்களை விட பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை இவருக்கு பெற்றுத் தந்தது.
இதையடுத்து தமிழில் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார் துஷாரா.
சமீபத்தில் இவர் ராயன் படத்தில் தனுஷ்க்கு தங்கையாக நடித்து இருந்தார். இதையடுத்து தற்போது விக்ரம் ஜோடியாக வீரதீர சூரன் படத்திலும், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் முக்கியமான ஒரு ரோலிலும் நடித்து முடித்துள்ளார்.
பேட்டி
இந்நிலையில் தற்போது வேட்டையன் படம் குறித்து துஷாரா விஜயன் பேசியுள்ளார். அதில், இந்த படத்தில் முதல் காட்சியில் ரஜினியுடன் மறுநாள் நடிக்கவிருந்த சூழலில் அதற்கு முந்தைய நாள் தனக்கு காய்ச்சலே வந்து விட்டதாக கூறியுள்ளார். அவருடன் இணைந்து நடித்தது தனக்கு கனவு மாதிரி இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் தனக்கு மிகவும் வெயிட்டான ரோல் கிடைத்ததாகவும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். இதேபோல் பகத் பாசில் மிகப்பெரிய நடிகர் என்றும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் வேட்டையன் படம் தனக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் துஷாரா மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
