நான் 35 வயதில் அதில் இருந்து விலகிவிடுவேன், ஷாக்கிங் தகவல் கூறிய துஷாரா விஜயன்.. என்ன விஷயம் பாருங்க
துஷாரா விஜயன்
கடந்த 2019ம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை துஷாரா விஜயன்.
முதல் படம் அவ்வளவாக ரீச் கொடுக்கவில்லை, அடுத்தபடியாக அவர் நடித்த சார்பட்டா பரம்பரை மூலம் பெரிய ஹிட் பார்த்தார். அப்படத்தில் அவர் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இப்போது சூப்பர் ஸ்டாருடன் ரஜினிகாந்துடன் வேட்டையன், தனுஷுடன் ராயன் மற்றும் சியான் விக்ரமுடன் வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் அண்மையில் நடந்த தனுஷின் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட துஷாரா விஜயன் தனுஷ் பற்றி பெருமையாக பேசியிருந்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம பேசும்போது, என்னுடைய 35வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன்பிறகு நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
இப்போது அவருக்கு 26 வயது நடைபெறுகிறது, 9 ஆண்டுகள் அவர் நடிப்பார் என்பது தெரிகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
