தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி.. துஷாரா விஜயன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
ராயன்
நடிகர் தனுஷ் இயக்கியும் நடித்தும் வெளிவந்த படம் ராயன். இந்த படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தார்.
இந்த படம் A சான்றிதழ் பெற்று திரைக்கு வந்த முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
தன் தம்பி தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்பங்களுடன் உருவான இந்த படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் துஷாரா விஜயனின் துர்கா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
துஷாரா வெளியிட்ட பதிவு
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், துர்கா கதாபாத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் தான் சாத்தியமானது என்றும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவிற்கு பெரிய நன்றிகள் எனவும், துர்கா கதாபாத்திரத்துக்கு கிடைத்த தங்களின் அன்பும், தங்களின் அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும் அதற்கு மிக பெரிய நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்கள் இயக்குனர் தனுஷுக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் மிகப்பெரிய நன்றியை கூற கடமைப்பட்டியிருக்கிறேன் என்றும் மேலும் தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்து கொண்டே இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
