துவாரக் ராஜாவின் பரோல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கேங்ஸ்டர் படங்கள் தான் தற்போது தமிழ் சினிமாவில் அதிக வெற்றிகளை குவித்து வருகின்றன. அந்த வகையில் 'பரோல்' என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த படத்திற்கு குரல் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் - தம்பி பிரச்சனை
இரட்டை கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் அண்ணன். தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்க முயற்சிக்கிறான் தம்பி.
அண்ணன் தம்பி இடையே இருக்கும் பிரச்சனை பற்றியது தான் இந்த பரோல் படத்தின் கதை. சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த பரோல் படத்தின் கதைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.
ரிலீஸ் தேதி
தற்போது பரோல் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். வரும் நவம்பர் 11ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.