சிறு வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் பாருங்க.. லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக அறியப்பட்டு சிறு வயதிலே திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் என்பதை குறித்து கீழே காணலாம்.
அமலா பால்:
'மைனா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் 23 வயது இருக்கும் போது இயக்குனர் ஏஎல் விஜயை முதல் திருமணம் செய்துகொண்டார்.
பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
அதிதி ராவ்:
இவர் நடிகர் சித்தார்த்தை சமீபத்தில் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் வெறும் 24 வயது இருக்கும் போது சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் சில காரணத்தினால் பிரிந்து விட்டார்.
ஷாலினி:
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் போது நடிகர் அஜித் குமாரை காதலித்து 21 வயது இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார்.
ஜெனிலியா:
தனக்கென சினிமாவில் தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து புகழின் உச்சத்தில் வலம் வந்த நிலையில், பாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வெறும் 24 வயது என கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
