ரூ. 98 கோடி மதிப்பிலான பிரபல நடிகையின் சொத்துக்கள் முடக்கம்- பரபரப்பான தகவல்
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்யா ஷெட்டி.
தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
ராஜ்குந்தரா ஆபாச திரைப்படங்களை தயாரித்து அதை வெளிநாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு விற்ற வழக்கில் சிறை சென்றார். பின் நிறைய போராட்டங்களுக்கு பிறகு ராஜ் குந்தரா ஜாமீனில் வெளியே வந்தார்.
அதிரடி ஆக்ஷன்
இந்த நிலையில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள பிட்காயின் மோசடியில் ராஜ் குந்தரா ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு சொந்தமான சுமார் ரூ. 97.79 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 150 கோடி பணத்தை குந்திரா மோசடி செய்திருப்பதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.