நடிகை மகாலக்ஷ்மி கணவர் ரவீந்தர் வீட்டில் ரெய்டு.. சிக்கியது என்ன?
சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பிரபல தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் ஷோ விமர்சகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.
அவர் சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். சில மாதங்கள் சிறையில் இருந்து அதன் பிறகு அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.
திடக்கழிவில் இருந்து பவர் எடுக்கும் பிஸ்னஸ் என கூறி 16 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு ஆன நிலையில் தான் ரவீந்தர் கைது ஆனார்.
ரெய்டு
இந்நிலையில் சென்னை அசோக் நகர் பகுதியில் இருக்கும் ரவீந்தர் - மஹாலக்ஷ்மியின் வீட்டுக்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருக்கின்றனர்.
வீட்டில் இருந்து அவர்கள் ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும், அது பற்றிய தகவல் அமலாக்கத்துறை விரைவில் வெளியிடும் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே பதிவாகி இருக்கும் மோசடி வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்கிற புகாரின் அடிப்படையில் தான் இந்த ரெய்டு நடந்து இருக்கிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
