ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்
பாலிவுட் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி ஆக இருந்து வரும் அமீர்கான் மகன் ஜுனைத் கான் தென்னிந்திய சென்சேஷ்னல் சாய் பல்லவி இணைந்து நடித்து சுனில் பாண்டே இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு நாள் படம் எப்படி பார்ப்போம்.

கதைக்களம்
டினோ(ஜுனைத் தான்) மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர். ஆனால் அவருக்கு மீரா(சாய் பல்லவி) என்ற பெண் மீது ஒரு காதல் வருகிறது, அதை சொல்ல முடியாமல் தவிக்கின்றார்.
இந்த நிலையில் இவர்கள் கம்பெனியில் ஜப்பான் ட்ரிப் ஒன்று செல்கின்றனர், அங்கு சாய் பல்லவியிடம் பேச முயற்சித்தாலும் பயத்தில் அவர் பேச முடியாமல் இருக்கிறார்.

ஒரு நாள் சாய் பல்லவிக்கு ஒரு விபத்து ஏற்பட அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்கின்றனர், ட்ரிப் வந்தவர்கள் எல்லாம் கிளம்ப டினோ மட்டும் சாய் பல்லவியுடன் இருக்கிறார்.
சாய் பல்லவி எழும் போது அவருக்கு கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது எல்லாம் மறந்து போகும் என நிலை உருவாக, இந்த ஒரு நாளை டினோ எவ்ளோ ஸ்பெஷல் ஆக்குகிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
படத்தின் நாயகன் ஜுனைத் கான், தன் அப்பா மிகப்பெரிய ஜாம்பவான் கண்டிப்பாக ஒப்பிடு வரும் அதனால் நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்க, அவரும் முடிந்த அளவிற்கு நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார், ஆனால் ஒரு சில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது, அதை தவிர்த்து கான்பிடண்ட் ஆக நடிக்க வேண்டும்.
சாய் பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்கு தாண்டி தற்போது ஹிந்தி சினிமாவிலும் தடம் பதித்து செம கான்பிடண்ட் ஆக நடித்தும் உள்ளார். படத்தின் பல காட்சிகள் உயிர்ப்புடன் இருக்க சாய் பல்லவி துறு துறு நடிப்பே காரணம். மீரா-வாக ஜொலித்துள்ளார்.

ஒரு நாள் தாய் மொழியில் வெளிவந்த ஒரு நாள் படத்தின் ரீமேக், முடிந்த அளவிற்கு நேர்மையாக அந்த படத்தின் எசன்ஸ் குறையாமல் எடுக்க முயற்சித்துள்ளனர், ஆனால் நடிகர் தேர்வில் ஜுனைத் இன்னசண்ட் ஆக இருக்க வேண்டிய இடத்தில், இவர் 10 பேரை அடிப்பது போல் இருக்க நமக்கு காட்சியோடு ஒன்ற முடியவில்லை சில இடங்களில்.
மற்றப்படி அங்கங்கே வரும் கியூட் மொமண்ட் குறிப்பாக ஒரு பார்-ல் நடக்கும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது, என்ன ஒரு நாள் டைட்டிலுக்கு ஏற்ப நாமும் ஒரு நாள் முழுவதும் படம் பார்த்த உணர்வை தருகிறது. டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை இரண்டும் பிரமாதம், ஜப்பான் அழகைகாட்டிய விதம் அருமை.

க்ளாப்ஸ்
சாய் பல்லவி ஆக்டிங்
காதல் காட்சிகள்
சில வசனங்கள், டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ஒரு நாள் முழுமையான மனதில் நிற்கவில்லை.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri