மாபெரும் வெற்றியடைந்த லெவன் படத்தின் இயக்குநர் லோகேஷின் அடுத்த படம்.. லேட்டஸ்ட் அப்டேட்
லெவன்
எந்த ஒரு எதிர்ப்பார்பும் இல்லாமல் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் லெவன். இப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியிருந்தார்.
நவீன் சந்திரா, ரியா ஹரி, திலீபன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிநடை போட்ட இப்படம், ஓடிடியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். பலரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்கமால் மிஸ் பண்ணிட்டோம் என கூறினார்கள்.
லெவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் அடுத்த படம் என்ன என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அடுத்த படம்
இந்த நிலையில், இவருடைய அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸை அணுகியுள்ளனர். இதில் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு படம் பண்ணலாம் என முடிவு செய்துள்ளார். இதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகிறதாம்.
ஆனால், நடிகர்கள் நடிகைகள் யார்யார் படக்குழுவினர்கள் யார்யார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. விரைவில் இப்படத்தின் அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.