லெவன் திரை விமர்சனம்
நவீன் சந்திரா, அபிராமி நடிப்பில் இருமொழி படமாக "லெவன்" திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
கதைக்களம்
சென்னையில் ஐபிஎஸ் போலீஸ் ஆபிசரான அரவிந்த் எந்த ஒரு கேஸாக இருந்தாலும் விரைவாக முடிக்கும் திறமையானவர்.
சக போலீஸ் ஆபிசர் தொடர் கொலைகள் நடக்கும் கேஸை விசாரிக்கும்போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறார். அதனால் அவர் விசாரித்து வந்த சீரியல் கில்லர் கேஸ் அரவிந்திற்கு கை மாறுகிறது.
அவர் விசாரணையை தொடங்கிய பின்னும் சிட்டிக்கு வெளியே எரிந்த நிலையில் சடலங்கள் கிடைகின்றன. கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை விசாரிக்கிறார் அரவிந்த்.
அப்போது அவர்கள் தங்கள் இரட்டையரை கொலை செய்ததும், அதனை தங்களுக்கே தெரியாமல் ஒரு மர்ம நபர் செய்ய வைத்ததும் தெரிய வருகிறது. அவர்களின் வாக்குமூலத்தின்படி ஒரே பள்ளியில் படித்த பிற இரட்டையர்கள்தான் அடுத்த குறி என்பதை அரவிந்த் கண்டுபிடிக்க, அவர்களை அவர் காப்பாற்றினாரா? கொலையாளி யார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
அரவிந்த் கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா மிடுக்கான அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்யும் அவர், விசாரணை செய்யும் விதத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
அவருடன் பணியாற்றும் அதிகாரியாக வரும் திலீபனுக்கு நடிப்பதற்கு பெரிய வேலை இல்லை. ஆனாலும் கிளைமேக்ஸ் வரை அவரது கதாபாத்திரம் டிராவல் பண்ணுவது டென்சனை அதிகரிக்கிறது.
2006யில் இரட்டையர்கள் படித்த பள்ளியில் இன்று இருப்பவர்கள் தங்களது சகோதர, சகோதரியை கொல்ல வேண்டும் என்பதுதான் வில்லனின் மோட்டிவ். அதற்கான பிளாஷ்பேக் நல்ல எமோஷனல் டச்.
ராட்சசன் படத்தைபோல் இருந்தாலும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனாலும் படத்தில் தொய்வை ஏற்படுத்துவது ஹீரோயின் வரும் காதல் காட்சிகள்தான். குறிப்பாக ஹீரோயினே இரிடேட் கேரக்ட்டர் எனலாம்.
கிளைமேக்ஸ் செம ட்விஸ்ட். இமான் இசை சிறப்பு. ஒளிப்பதிவு கச்சிதம்.
க்ளாப்ஸ்
விறு விறு திரைக்கதை பிளாஷ்பேக் ஃபோர்ஷன் கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
ரொமான்ஸ் சீன்ஸ் ஒரு சில லாஜிக் மீறல்கள்
மொத்தத்தில் ஓரிரு குறைகளை தவிர்த்து பார்த்தால் நல்ல டீசென்ட் திரில்லர்தான் இந்த லெவன்.