Emmy விருது விழாவில் விஜய் சேதுபதி... முதல் இந்திய நடிகர் செய்த விஷயம்...
விஜய் சேதுபதி
ஹாலிவுட்டில் என்றாலே படங்கள் முதலில் நியாபகம் வரும், அடுத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக நடக்கும் ஆஸ்கர் விருது தான்.
இந்த ஆஸ்கர் விருதிற்கு இணையாக பார்க்கப்படும் இன்னொரு விருது விழா தான் Emmy Awards. அமெரிக்காவில் கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி 25 முதல் இந்த Emmy விருது வழங்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது, அண்மையில் நியூயார்க் நகரில் 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழா நடைபெற்றது.
கோலாகலமாக நடக்கும் இந்த எம்மி விருது விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.
பெருமை
அமெக்காவில் நடைபெற்ற எம்மி விருது விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி விருதை வழங்கியுள்ளார். இதனால் எம்மி விருது விழாவில் விருது வழங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

வெளிநாட்டில் நடந்த எம்மி விருது விழாவிற்கு கருப்பு நிற கோட் சூட் உடன் நடிகர் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதியும் பங்கேற்றுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri