குழந்தைக்கு செருப்பு மாட்டிவிட்டு நடிகர் சூர்யா.. அனைவரையும் எமோஷனல் ஆக்கிய புகைப்படம்
நடிகர் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தாணு தாயாருக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் நடித்துள்ள குழந்தைக்கு தனது கைகளால் நடிகர் சூர்யா செருப்பு மாட்டிவிட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், எமோஷனல் ஆகி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
