3 நாட்களில் வசூல் வேட்டையாடிய எம்புரான்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
எம்புரான்
மாபெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எம்புரான் திரைப்படம் கடந்த 27ம் தேதி திரைக்கு வந்தது. லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் இயக்கிய இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோனியோ தாமஸ், சுராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் பாகம் அளவிற்கு இல்லை என்று கூறி பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் கூட 3 நாட்களில் இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல்
ஆம், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் எம்புரான் திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.