மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைக்கும் எம்புரான்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
எம்புரான்
சென்ற வாரம் வெளிவந்த மோகன்லாலின் எம்புரான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான இப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மலையாள சினிமாவிலிருந்து அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வெளிவந்த எம்புரான் ப்ரீ புக்கிங்கிலேயே வசூலில் சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து சென்ற வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், பொது பார்வையாளர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
வசூல் சாதனை
இந்த நிலையில், 7 நாட்களை கடந்திருக்கும் எம்புரான் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 225 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது.