ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் மோகன்லாலின் எம்புரான்.. இதுவரை இத்தனை கோடி வசூலா
லூசிஃபர் 2: எம்புரான்
நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான்.
கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இப்படத்தில் மோகன்லால் உடன் இணைந்து மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், Eriq Ebouaney, Jerome Flynn, சுராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முதல் பாகம் உலகளவில் ரூ. 145 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஆகையால் இந்த இரண்டாம் பாகம் கண்டிப்பாக ரூ. 400 கோடி முதல் ரூ. 500 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், எம்புரான் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் நடந்து வரும் ப்ரீ புக்கிங்கில் இருந்து இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம், கண்டிப்பாக முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் வரும் என உறுதியாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
