ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ
ரோபோ ஷங்கர்
உலகம் இப்போது இயங்கும் வேகத்தில் மக்கள் வேலை வேலை என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் சம்பாதித்து விட வேண்டும் என மற்ற எதைப்பற்றியும் யோசிக்காமல் உள்ளார்கள். அதில் சிரிக்க கூட மறந்துவிடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
கலைஞன்
சிரிப்பு என்றால் என்ன கூட தெரியாத அளவு ஒடும் மக்களை சிரிக்க வைக்க இப்போதெல்லாம் நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வர ஆரம்பித்துவிட்டது. அ
ப்படி விஜய் டிவி ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் காமெடியனாக இடம் பிடித்தவர் தான் ரோபோ ஷங்கர். ரியாலிட்டி ஷோக்களில் கலக்கியவர் வெள்ளித்திரை வந்து அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வந்தார்.
மறைவு
சிறந்த கலைஞனாக வலம்வந்த ரோபோ ஷங்கர் இப்போது நம்முடன் இல்லை. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் இடையில் உடல்நலம் தேறி மீண்டும் நடிக்க தொடங்கினார்.
ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமாக கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
நம் நினைவில்
ரோபோ ஷங்கர் அவர்களின் மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.
விஜய் டிவியில் பெரிய பங்கு வகித்த ரோபோ ஷங்கரை நினைவுகூறும் வகையில் என்றும் நம் நினையில் ரோபோ ஷங்கர் என்ற ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
ரோபோ ஷங்கருக்கு நெருக்கமான பிரபலங்கள், அவரது மனைவி மகள் என அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதோ புரொமோ,