வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
'எங்கள் தங்கம்'
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் 'எங்கள் தங்கம்'. இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தை சமந்தா தனது கணவருடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து கவுதமி, ஸ்ரீமுகி ஆகியோர் நடித்துள்ளனர்.

வசூல்
கடந்த 19-ஆம் தேதி வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படத்திற்கு முதல் நாளிலிருந்தே வசூல் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 நாட்களில் 'எங்கள் தங்கம்' திரைப்படம் உலகளவில் ரூ. 41 - 43 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஓப்பனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி நடிகை சமந்தா மாஸ் காட்டியுள்ளார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan