2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
எங்கள் தங்கம்
சமந்தா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த 'மா இண்ட்டி பங்காரம்' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழில் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் வெளியானது.

இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார். இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமந்தாவின் கம்பேக் திரைப்படமாக ரசிகர்களால் 'எங்கள் தங்கம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

வசூல்
இந்த நிலையில், இப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் 'எங்கள் தங்கம்' திரைப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இப்படம் 2 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட்டாகியுள்ளது. கண்டிப்பாக ரூ. 100 கோடியை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu