ஒரு ரூபா கூட வரல.. என்ஜாய் எஞ்சாமி பாடல் பற்றி சந்தோஷ் நாராயணன் அதிர்ச்சி புகார்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல் என்ஜாய் எஞ்சாமி. அதில் சந்தோஷ் நாராயண் மகள் தீ மற்றும் தெருக்குறள் அறிவு ஆகியோர் பாடி இருந்தனர்.
மிகப்பெரிய ஹிட் ஆன அந்த பாடல் தொடர்பாக ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இடையே சர்ச்சை ஒரு வருடத்திற்கு முன்பு வெடித்து இருந்தது.
”இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். யாரும் எனக்கு மெட்டு தரவில்லை” என அறிவு கூற, அவருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இருக்கும் பிரச்சனை வெளியில் தெரியவந்தது.
ஒரு ரூபாய் கூட வரல..
இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி பற்றி சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மியூசிக் நிறுவனம் இதுவரை ஒருரூபாய் கூட தரவில்லை என புகார் கூறி இருக்கிறார்.
ஒரு பில்லியன் ரசிகர்களுக்கும் மேல் பார்க்கப்பட்ட பாடலுக்காக ஆர்டிஸ்டுகளுக்கு ஒரு ருபாய் கூட இதுவரை வரவில்லை என வர தெரிவித்துள்ளார்.
வீடியோ இதோ
#EnjoyEnjaami ?? pic.twitter.com/rxRaPcPsUR
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 5, 2024

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
