Epic (தெலுங்கு): திரை விமர்சனம்

By Sivaraj Sep 12, 2026 08:40 AM GMT
Report

Epic (தெலுங்கு)

ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள Epic தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Epic (தெலுங்கு): திரை விமர்சனம் | Epic Telugu Movie Review

கதைக்களம்

திரைப்பட இயக்குநராக வேண்டும் என நண்பர்களுடன் சேர்ந்து குறும்படம் எடுக்கிறார் ஆதித்யா (ஆனந்த் தேவரகொண்டா). அதனை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி இயக்குநராக ஆதித்யா முயற்சிக்க, அரசு பள்ளி ஆசிரியரான அவரது அப்பா மகனை வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த சூழலில் இங்கிலாந்து சென்று ஒரு வருட கோர்ஸ் படித்தால், நல்ல வேலை கிடைக்கும் என்று தெரிய வர, ஆதித்யாவின் அப்பா லோன் வாங்குகிறார். பெற்றோரின் வற்புறுத்தலால் ஆதித்யாவும் லண்டன் செல்கிறார்.

அதே சமயம் நண்பர்கள் அவரிடம் அங்கிருந்தே கதை எழுது; உன் குறும்படம் மூலம் இங்கே வாய்ப்பு கிடைத்தவுடன் வந்துவிடு என்று ஆலோசனை கூறி அனுப்பி வைக்கிறார்கள்.

Epic (தெலுங்கு): திரை விமர்சனம் | Epic Telugu Movie Review

லண்டன் சென்ற ஆதித்யா, தான் தங்கவிருக்கும் இடம் பிடிக்காததால் முதல் நாளே அறிமுகமான ஒருவரிடம் தனியாக இருக்க இடம் கேட்கிறார். அவரும் தனது பிளாட்டை காலி செய்ய இருப்பதாகவும், இப்போது பார்க்கும் கேஷியர் வேலையையும் ஆதித்யாவிற்கு கொடுக்கிறார்.

இந்த நிலையில் கடலி என்ற பெண்ணை கோர்ஸ் படிக்கும் சென்டரில் சந்திக்கும் ஆதித்யா அவருடன் நெருக்கமாகிறார். அதன் விளைவாக இருவரும் ஒரே பிளாட்டில் தங்க முடிவெடுக்க, காதல் மட்டும் வேண்டாம் தீர்மானிக்கிறார்கள்.

அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் காதல் எப்படி வந்தது? என்னவெல்லாம் அவர்கள் சந்தித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

பேபி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தில் ஜோடியாக நடித்த ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் படம் இது.

An Unfinished Story என்ற டேக்லைன் உடன் வெளியான இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. 2018-யில் நடக்கும்படியாக இந்த கதையை ஓ காதல் கண்மணி பாணியில் இயக்குநர் கையாண்டுள்ளார்.

ஆனந்த், வைஷ்ணவியின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இருவருக்குமான காதல் காட்சிகள் நன்றாக உள்ளன. வெகுளியாக ஆனந்த் பேசுவதிலும், நடந்துகொள்வதில் நல்ல நடிப்பை தந்துள்ளார்.

Epic (தெலுங்கு): திரை விமர்சனம் | Epic Telugu Movie Review

அதேபோல் வைஷ்ணவியும் மெச்சூரான பெண்ணாக நடிப்பை வெளிப்படுத்த முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதி ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சில இடங்களில் காமெடி நன்றாக சிரிக்க வைக்கிறது.

சிவாஜி, வாசுகி பெற்றோராக ஆங்காங்கே வந்தாலும் நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர். அவர்களைத் தாண்டி வேறு கதாபத்திரங்களுக்கு பெரிய ஸ்கோர் இல்லை. ஹெஷம் அப்துல் வாஹப்பின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு பலம். அஸீம் மொஹம்மதின் கேமராஒர்க் சிறப்பு.

Epic (தெலுங்கு): திரை விமர்சனம் | Epic Telugu Movie Review

க்ளாப்ஸ்

ஆனந்த், வைஷ்ணவி இசை ரொமான்ஸ் காட்சிகள்

பல்ப்ஸ்

சுவாரஸ்யம் குறைவான இரண்டாம் பாதி

மொத்தத்தில் இந்த Epic பெயருக்கு தகுந்தாற்போல் இல்லை; காதலர்கள் ரசிக்கலாம்.

ரேட்டிங்: 2.5/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US