கோபி - சுதாகரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்.. முதல் முறையாக கூறிய ஈரோடு மகேஷ்
கோபி - சுதாகர்
Youtube தளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி - சுதாகர். இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கும் லட்ச கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.
Youtubeல் ஜொலித்து வந்த இவர்கள் தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். ஆம், தற்போது புதிதாக ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோபி - சுதாகர் இருவரும் ஆரம்ப கால கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
ஆனால், அப்போது அவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆம், அவர்கள் இருவரையும் ஆடிஷனில் வெளியேற்றிவிட்டனர். அதன்பின் Youtube பக்கம் வந்த கோபி - சுதாகர் தற்போது முன்னணி பிரபலன்களாக வளர்த்துள்ளனர்.
நகைச்சுவையில் சிறந்து விளங்கும் இவர்கள் எப்படி விஜய் டிவி நடுவர்கள் ரிஜெக்ட் செய்தனர் என கலக்கப்போவது யார் ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி உள்ளிட்டோரின் மீது சர்ச்சை எழுந்தது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் ஈரோடு மகேஷ் பேசியுள்ளார். அவர் கூறியதில் "நான் என்ன கோபி - சுதாகர் வாய்ப்பை தட்டி பறித்தேனா இல்லை, அந்த நேரத்தில் அவர்கள் நன்றாக நகைச்சுவை செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பார்கள்".
"நல்ல பெர்பார்மென்ஸ் தான் முக்கியம். மற்றபடி அவர்கள் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட கோபம் இல்லை. அண்மையில் கூட நிகழ்ச்சி ஒன்றில் கோபி - சுதாகரை சந்தித்தேன். அவர்கள் இருவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள்" என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஈரோடு மகேஷ்.
90களில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?