மகாலக்ஷ்மியை தொடர்ந்து திவ்யா ஸ்ரீதர் பிரச்சனைக்கும் காரணம் ஈஸ்வர் தானா.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் விவகாரம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, நடிகை மகாலட்சுமியின் தனது கணவரும் நெருக்கமாக இருப்பதாக புகார் அளித்திருந்தார்.
அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட மகாலக்ஷ்மி இந்த பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏற்கனவே மகாலக்ஷ்மியுடன் சர்ச்சையில் சிக்கிய ஈஸ்வர் தற்போது மீண்டும் அதே போல் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் பிரபல சீரியல் நடிகரான அர்னவ்வை பதிவு திருமணம் செய்துகொண்டார்.
காரணம் ஈஸ்வர் தானா
திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் தனது கரு கலைந்துவிடும் என்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
திவ்யாவின் புகாருக்கு அர்னவ் மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் தங்களுக்குள் நடக்கும் சின்னசின்ன சண்டையை திவ்யா ஊதி பெரிதாக்குகிறார் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஈஸ்வருடன் இணைந்து திவ்யா கருவை கலைக்க போவதாகவும் அதற்காக தான் இத்தனை நாடகங்கள் என்றும் அர்னவ் கூறியுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளின் விவகாரத்தில் நடிகர் ஈஸ்வரின் பெயர் அடிபடுகிறது.