வலிமை படத்தை போல சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இந்த குறை கிடையாது !
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
ஆக்ஷன் பேமிலி என்டேர்டைனராக உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இதற்கிடையே இன்று காலை நடந்த இப்படத்தின் பிரஸ் மீட் விழாவை தொடர்ந்து ET படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது, அந்த அதிரடியான ட்ரைலர் தற்போது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரன் டைம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ET திரைப்படம் மொத்தம் 2 மணிநேரம் 30 நிமிஷம் (150.38 நிமிடங்கள்) வரை இருக்குமாம்.
இதற்கு முன் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், அதுவே இப்படத்திற்கு பெரிய குறையாக பேசப்பட்டு பின் படத்தின் நீளத்தை குறைத்தனர்.
அதை ஒப்பிடுகையில் ET திரைப்படம் குறைந்த நேரம், எனவே படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
