சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முக்கிய இடத்தில் படு தோல்வியா?- வசூல் விவரம் கேட்டு ஷாக்கில் ரசிகர்கள்
பாண்டிராஜ் கூட்டணியில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் OTT ரிலீஸை தொடர்ந்து இப்படம் திரையரங்கில் வெளியானதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
படம் வெற்றியா? தோல்வியா?
சூர்யாவின் ஜெய் பீம் படத்தை சில அரசியல் கட்சி எதிர்த்து போராட்டம் எல்லாம் செய்தார்கள். நிறைய வழக்குகள் படக்குழு மீது போடப்பட்டது. அதேபோல் இந்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் சில அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஒருசில இடங்களில் படம் ரிலீஸ் ஆகவே பிரச்சனையாக இருந்தது.
ஆனால் திரையிடப்பட்ட வரைக்கு கலவையான விமர்சனங்கள் தான் வருகின்றன.

படத்தின் வசூல் விவரம்
எதற்கும் துணிந்தவன் படம் வார நாட்களில் கடுமையான தோல்வியை சந்தித்து வருகிறதாம், வசூல் எதிர்ப்பார்த்த அளவு இல்லை. இதுவரை தமிழகத்தில் படம் ரூ. 30 கோடி வசூலை கூட எட்டவில்லை என்கின்றனர்.
இது சூர்யா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்.. எவ்வளவு கோடிக்கு விற்றுப்போய்வுள்ளது தெரியுமா