எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்

suriya sathyaraj review pandiraj etharkum thuninthavan priyanka mohan saranya ponvanan
By Kathick Mar 10, 2022 10:21 AM GMT
Report

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் இரண்டரை ஆண்டுகள் கழித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில், முழு கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பல நாட்கள் கழித்து, மண்வாசம் வீசும் கதைக்களத்தில் சூர்யாவை பார்க்க ரசிகர்கள் அனைவரும் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்துகொண்டு இருந்தார்கள். அனைவரின் முழு எதிர்பார்ப்பையும், எதற்கும் துணிந்தவன் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..  

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் | Etharkum Thuninthavan Review

கதைக்களம்

வடநாடு, தென்னாடு என இரு ஊர் மக்களும் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவினர்களாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத சமயத்தில் கண்ணபிரான் { சூர்யா } ஊர்கார பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், இரண்டு ஊர் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு, இரு ஊரும் பிரிந்துவிடுகிறது.

வக்கீலாக வரும் சூர்யா தனது அப்பா, அம்மா, மாமா என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கதாநாயகி ஆதினியை { பிரியங்கா மோகன் } சந்திக்கும் சூர்யா காதலில் விழுந்து, அவரையே திருமணம் செய்கிறார். இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பெண்களை தவறான முறையில் வீடியோ எடுத்து அவர்களை தவறான விஷயங்களுக்கு வில்லன் இன்பா { வினய் } பயன்படுத்துகிறார். அதில் தனக்கு அடிபணியாத பெண்களை கொலையும் செய்கிறார்.

இந்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் சூர்யா, வில்லன் வினய்யை தடுக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார். அதில் பல மனக்கசப்பான விஷயங்களையும், பல துயரங்களையும் சந்திக்கிறார். அணைத்து இன்னல்களிலும் இருந்து சூர்யா தப்பித்தாரா? இல்லையா? வினய்யிடம் சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் | Etharkum Thuninthavan Review

படத்தை பற்றிய அலசல்

கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா தனது நடிப்பில் மிரட்டுகிறார்.'நான் கோட்டு போட்டா ஜட்ஜ் வேற, வேட்டிய கட்டுனா, நான்தான்டா ஜட்ஜ்' என்று சூர்யா பேசும் ஒவ்வொரு வசனமும், செம மாஸ். கதாநாயகி பிரியங்கா மோகனின் நடிப்பு, துவக்கத்தில் கொஞ்சம் போர் அடித்தாலும், காட்சிகள் செல்ல செல்ல படம் பார்க்கும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிடுகிறார்.

சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் தங்களின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். சூரியின் நகைச்சுவை சிலது மட்டுமே ஒர்கவுட் ஆகியுள்ளது. புகழ் சில காட்சிகள் வந்தாலும், ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ராமர், சரண் ஷக்தி, திவ்யா துரைசாமி நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் | Etharkum Thuninthavan Review

வில்லனாக வரும் நடிகர் வினய், சூர்யாவிற்கு நிகரான நடிப்பை காட்டியுள்ளார். இயக்குனர் பாண்டிராஜின் மண்மணம் மாரா கதைக்களம் சூப்பர். முதல் பாதி திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக, 'உள்ளம் உருகுதையா' பாடலை தவிர்த்து இருக்கலாம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறத்தலை சரியாக எடுத்துக்காட்டியுள்ளார். பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை என்றும் ஆணித்தனமாக காட்டியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அதற்காக அவருக்கு தனி சல்யூட்.

ராம், லக்ஷம் ஸ்டண்ட் மாஸ்டர்களின் சண்டை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளது. டி. இமானின் பின்னணி இசை, பாடல்கள் ஓகே. ஆர். ரத்னவேலுவின் ஒளிப்பதிவு சூப்பர். ரூபனின் எடிட்டிங் படத்திற்கு பலம். 

க்ளாப்ஸ்

சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பு

கதைக்களம்

சமுதாயத்திற்கு தேவையான முக்கிய பதிவு

பல்ப்ஸ்

முதல் பாதி கொஞ்சம் ஸ்லொவ்

சில இடங்களில் காமெடி ஒர்கவுட் ஆகவில்லை

மொத்தத்தில் சூர்யாவின் ரசிகர்கள் முதல், குடும்பங்கள் வரை அனைவரும் கொண்டாடும் பக்கா கமெர்ஷியல் படமாக அமைந்துள்ளது, எதற்கும் துணிந்தவன்..

2.75 / 5


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US