தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
கோலங்கள் சீரியலை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் தொடர் எதிர்நீச்சல்.
முதல் பாகம் மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு முடிவுக்கு வந்த நிலையில் இப்போது 2ம் பாகம் நீயா நானா என்ற சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது கதைக்களத்தில் தர்ஷன் திருமண பரபரப்பு முடிந்த கையோடு குணசேகரன் பல வருடங்களாக மறைத்து வைத்த ஒரு சீக்ரெட் வெளிவர தொடங்கியுள்ளது. அந்த உண்மை யாருக்கும் தெரிய கூடாது என குணசேகரன் இராமேஸ்வரத்தில் ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டார்.

அந்த விஷயங்கள் குறித்து யார் விசாரிக்க வந்தாலும் அவர்களை போட்டு தள்ள கூறியிருக்கிறார். தற்போது இராமேஸ்வரத்தில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்து அந்த பெண்ணை பற்றி தெரிந்துகொண்டு வருகிறார்.
தெரியாத தகவல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் குணசேகரனுக்கு அப்படி கடிதம் எழுதிய பெண் யார், அவருக்கு என்ன நடந்தது, இப்போது எப்படி உள்ளார் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது சக்தி தேடும் தேவகி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தானாம்.
அதாவது தர்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும் மோனிகாவின் நிஜ அம்மா தான் தேவகி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.