பெண்களை மையப்படுத்தி சன் தொலைக்காட்சியில் வரப்போகிறது புத்தம் புதிய சீரியல்- யார் நடிக்கிறார் பாருங்க
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி சன்.
இதில் காலை ஆரம்பித்து இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். தற்போது இதில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்து செய்தி வந்துள்ளது.
எதிர்நீச்சல் என்ற பெயர் ஒரு தொடர், இதில் மதுமிதா என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எதிரே வரும் பல தடைகளைத் தாண்டி எதிர்நீச்சல் போட வருகிறாள் ஜனனி என்ற அடைமொழியோடு சீரியலை புரொமோட் செய்தனர் தொலைக்காட்சி.
தற்போது இந்த சீரியல் குறித்து வந்த தகவல் என்னவென்றால் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் சீரியல் நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி போன்றவர்கள் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.