நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க
எதிர்நீச்சல் 2
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இல்லத்தரசிகளின் பேராதரவை பெற்றுவரும் தொடர் எதிர்நீச்சல் 2.
திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் சீரியலுக்கு பின் இயக்கிய இந்த தொடருக்கு மக்களின் ஆதரவு பெரிதளவில் கிடைத்தது.
முதல் பாகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே டிஆர்பியில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியது. முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகமும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இந்த 2ம் பாகத்தையும் மக்கள் அதிகம் பார்த்து தங்களது விமர்சனங்களையும் வைத்து வருகிறார்கள்.

திருமணம்
இந்த 2ம் பாகத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் புதியதாக நடித்து வருபவர் நடிகை பார்வதி வெங்கடரமணன்.
சமீபத்தில் நடந்த சன் குடும்பம் விருது விழாவில் இவரிடம் எதிர்காலத்தில் காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்க்கும் பையனை திருமணம் செய்வீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், எதற்கு இந்த கேள்வி, நான் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா? நான் திருமணமே செய்யப்போவதில்லையே, எப்போதும் ஜாலியா முரட்டு சிங்கிளாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.
