முதல் பாகத்தில் நடித்த இத்தனை நடிகர்கள் எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் இல்லையா?... வெளிவந்த தகவல்
எதிர்நீச்சல் 2
எதிர்நீச்சல், ஒரு காலத்தில் சன் டிவியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வந்தது. மறைந்த நடிகர் மாரிமுத்து இந்த தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் இந்த தொடர் தான் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நிறைய முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து வந்தார்.
அவர் இறப்பிற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் என்னவோ டிஆர்பியில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. எனவே மொத்தமாக தொடரை முடித்திருந்தனர்.
புதிய தொடர்
கடந்த சில வாரங்களாக எதிர்நீச்சல் 2 தொடரின் புரொமோக்கள், புகைப்படங்கள் வெளியாக இப்போது முதல் பாகத்தில் இருந்தவர்கள் யாரெல்லாம் 2ம் பாகத்தில் இல்லை என்ற தகவல் வந்துள்ளது.
முதல் சீசனில் இருந்த சிலர் 2ம் பாகத்தில் நடிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர்.
அவர் யார் யார் என்றால் முதலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா, தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் கமிட்டாகியுள்ளதால் நடிக்கவில்லை. ஆதிரையாக நடித்த சத்யாவும் விஜய் டிவி சீரியலில் நாயகியாக கமிட்டாகியுள்ளார்.
தாரா கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஃபர்சானா வெளியேற பிரஜானா நடிக்கிறார்.
அதேபோல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வேல ராமமூர்த்திக்கு பதிலாக வேறொருவர் நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
