தற்கொலை செய்த ரிதன்யா குறித்து எதிர்நீச்சல் சீரியலில் சொல்லப்பட்ட முக்கியமான மெசேஜ்...
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் தொடர்கிறது, கோலங்கள் தொடர் புகழ் திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் சீரியல்.
குணசேகரனை பார்த்தாலே பயந்த அவரது வீட்டுப் பெண்கள் முதல் பாக கடைசியில் தான் அவரை எதிர்க்க துணிந்தார்கள். இரண்டாம் பாகம் தொடங்கியதில் இருந்து குணசேகரன் Vs அவரது வீட்டுப் பெண்கள் என்றே ஓடிக் கொண்டிருக்கிறது.
பார்கவியின் அப்பா இறக்க அவருக்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என பெண்கள் போராடி வருகிறார்கள்.
எபிசோட்
ஜனனி மற்றும் பெண்கள் குணசேகரனை ஜெயிலில் தள்ள வழக்கு பதிவு செய்ய இன்னொரு பக்கம் பார்கவி தைரியத்தை வர வைக்க ஜீவானந்தம் போராடுகிறார்.
வரதட்சணைக்காக ரிதன்யா இறந்த சோகத்தையும் பேசி பெண்கள் போராட வேண்டும் என உணர்ச்சி பொங்க சில விஷயங்களை திருச்செல்வம் பேசியுள்ளார். இப்படியே தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பார்த்து பயந்தால் இப்போல் தற்கொலைகள் தான் அதிகமாகும்.
ஆனால் தைரியமாக எல்லோரும் வெளியே வந்து போராட வேண்டும் என திருச்செல்வம் கூறிய அந்த எபிசோட் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.