பிரபல இயக்குனரின் படத்தில் கமிட்டாகியுள்ளாரா எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை ஹரிப்பிரியா- ரசிகர்கள் கமெண்ட்ஸ்
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல், சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். திருச்செல்வம் அவர்கள் இயக்க நமக்கு பரீட்சயமான நடிகைகள் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் மக்களிடம் நல்ல ரீச் பெற்று வந்தது.
தொடரில் அடிமையாக இருந்த பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துகொண்டிருந்தனர், அதைப்பார்க்கும் போது மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் என நினைத்தார்கள்.
ஆனால் தொடரில் வர வர பாசிட்டீவ் கதைக்களம் இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
ஹரிப்பிரியா புகைப்படம்
இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் செமயாக ஸ்கோர் செய்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா.
காமெடிக்கு காமெடி, கோபத்திற்கு கோபம், வருத்தத்திற்கு வருத்தம் என எல்லா எமோஷன்லயும் விளையாடி வருகிறார். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் முருகதாஸ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.