எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்ரியா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..! இரவு முழுவதும் கண்கலங்கி அழுத நடிகை
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளார் நடிகை ஹரிப்ரியா.
திருமண வாழ்க்கை
நடிகை ஹரிப்ரியா பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஹரிப்ரியா தனது மகனை கவனித்து வருகிறார்.

சிங்கிள் மதர்
இந்த நிலையில், நடிகை ஹரிப்ரியா சிங்கிள் மதராக இருப்பது குறித்து மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.
"சிங்கிள் மதராக இருப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல, அது பல சவால்களும், அழுத்தங்களும் நிறைந்த வாழ்க்கை. ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது என்பது உடல், மனம், பொருளாதாரம் என எல்லா ரீதியிலும் சோதனைதான். ஒரு குழந்தை தவறாக நடந்துகொண்டாலே 'அம்மா சரியாக வளர்க்கவில்லையா' என கேள்வி முதலில் வரும். அந்த ஒரு எண்ணமே எப்போதும் மனதிற்குள் அழுத்தமாக இருக்கும்" என கூறினார்.

அழுத நாட்கள்
"ஒரு காலத்தில் தனியாக ரூமிற்குள் அமர்ந்து விடிய விடிய அழுதிருக்கிறேன். சினிமா பார்க்க கூட மனசு இல்லாத நிலை இருந்தது. அழுவது பலவீனம் இல்லை, அது நம்மை உள்ளிருந்து பலமாக்கும் ஒரு வலி".
"வாழ்க்கையில் எப்போதும் உறுதியாக இருக்க முடியாது. சில நேரங்களில் உடைந்து போக வேண்டியது தான். ஆனால், அதிலிருந்து மீண்டு வரும்போதுதான் உண்மையான வலிமை கிடைக்கும். வாழ்க்கையில் தனியாகத்தான் வந்தோம், தனியாத்தான் போகப்போகிறோம். அதனால் தனிமையை நான் ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொண்டேன்" என உருக்கமாக நடிகை ஹரிப்ரியா பேசி இணையத்தில் வைரலாகி வருகிறது.
