எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் குழந்தையா இது! ஷாக்கான ரசிகர்கள்

Kathick
in பிரபலங்கள்Report this article
எதிர்நீச்சல் மதுமிதா
சன் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மதுமிதா. இவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் பல கோடி தமிழ் மக்கள் வீட்டிற்குள் இடம்பிடித்துள்ள நடிகை மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கூட புதிய கார் வாங்கினார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுமிதாவின் குழந்தையா இது
இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கையில் குழந்தையுடன் மதுமிதா புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குழந்தையுடன் மதுமிதா இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மதுமிதாவின் குழந்தையா இது என ஷாக்காகி விட்டனர்.
ஆனால், அது மதுமிதாவின் குழந்தை இல்லை, அது அவருடைய அக்காவின் குழந்தை. ஆம், தனது அக்காவின் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் நடிகை மதுமிதா சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
