ஜோசியக்காரர்களை வெளுத்து வாங்கிய ஆதி குணசேகரன்! டிவி ஷோவில் அதிர்ச்சி சம்பவம்
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மிரட்டி வருபவர் நடிகர் மாரிமுத்து. அவரது நடித்து மற்றும் வசங்களுக்கு ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள். குறிப்பாக 'ஏய்.. இந்தாம்மா' என அவர் பேசும் பாசனம் இணையத்திலும் மீம்களாக அதிகம் வைரல் ஆகின்றன.
மாரிமுத்து நடிகர் ஆவதற்கு முன்பு துணை இயக்குனராக ராஜ்கிரண், மணிரத்னம், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார்.
ஜோசியர்களை விளாசிய மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து சமீபத்தில் ஜீ தமிழின் தமிழா தமிழா ஷோவில் கெஸ்ட் ஆக கலந்துகொண்டார். அந்த விவாத நிகழ்ச்சியில் ஜோசியக்கார்கள் ஒரு பக்கமும், அவர்களை எதிர்ப்பவர்கள் இன்னொரு பக்கமும் இருந்தனர்.
கெஸ்டாக வந்த மாரிமுத்து ஜோஸ்யக்காரர்களை விளாசி இருக்கிறார். 'இந்தியா முன்னேறாமல் இருக்க ஜோசியக்கார்கள் தான் காரணம். ஜோசியம் பார்ப்பவனையும், ஜாதகம் பார்ப்பவனையும் மன்னிக்கவே முடியாது' என கூறி இருக்கிறார் மாரிமுத்து.
'ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவே முடியாது என பல ஜோசியக்காரர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போ என்ன நடந்திருக்கிறது. எந்த ஜோசியக்காரனாவது சுனாமி, வெள்ளம், கொரோனா என பேரழிவுகளை பற்றி முன்பே சொன்னார்களா' என கேட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜோசியக்காரர்களை விளாசி இருக்கிறார் மாரிமுத்து.