அடேய், எவன் பார்த்த வேலையா இது, வதந்தி பார்த்து பதறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்... என்ன ஆனது?
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடிய தொடர்களை யாருமே மறக்க மாட்டார்கள். அப்படி டிஆர்பியிலும், கதையிலும் சாதனை படைத்த ஒரு தொடர் தான் எதிர்நீச்சல்.
கோலங்கள் தொடரை தொடர்ந்து திருச்செல்வம் அவர்கள் புரட்சி செய்யும் வகையில் எதிர்நீச்சல் தொடரை இயக்கியிருந்தார். ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற பல விஷயங்களை இதில் பேசியிருந்தார்.
வெற்றிகரமாக ஓடிய தொடரை எண்ணவோ இதற்குள் முடித்துவிட்டார்கள், கிளைமேக்ஸ் கூட அவ்வளவு வெயிட்டாக இல்லை, முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் முடித்தது போல் உள்ளது என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள்.
நடிகரின் பதிவு
இந்த நிலையில் மாரிமுத்து இறப்பிற்கு பிறகு குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வந்தார்.
சீரியல் முடிந்த பிறகு வேலராமமூர்த்தி ஒரு பேட்டியில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன் என்றும் அதனால் வேதனையில் இருக்கிறேன் என அவர் கூறியதாக தகவல் வைரலானது.
இதுகுறித்து வேலராமமூர்த்தி தனது இன்ஸ்டாவில், "எதிர்நீச்சல் சீரியல் என்னை உலக தமிழர்கள் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்துள்ளது.
அதில் நான் மனப்பூர்வமாய் பங்கேற்றினேன் என்பதே உண்மை. தயவு செய்து இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.