சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வந்துள்ள எதிர்நீச்சல் தொடர் நடிகர்- யார் பாருங்க
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த தொடரில் இப்போது அப்பத்தா-குணசேகரன் இருவரும் ஒவ்வொரு பிளானில் திருவிழாவிற்கு வந்துள்ளார்கள்.
இதில் யார் அதிர்ச்சி கொடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதேபோல் கௌதமிடம் சிக்கிக்கொண்ட கதிர் இப்போது வெளியே வந்துவிட்டார், இதனால் குணசேகரன் அடுத்து என்ன செய்வார் என்பது தெரியவில்லை.
ஈஸ்வரி இதற்கு மேல் பெரிய பிரச்சனை உள்ளது என குடும்பத்தினரிடம் கூற அனைவரும் என்ன நடக்குமோ என்று இருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை
தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் அண்ணாமலை நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் இன்று மட்டும் தான் நான் இருப்பேன் என பெரிய மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
அவர் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆடிட்டராக இருப்பவர், அவரா இங்கு வந்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.