அடுத்தடுத்து பாலித்தீவு சென்றுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்- யாரெல்லாம் பாருங்க, வீடியோ வைரல்
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிறது.
பிக்பாஸ் பிரபலத்திற்கு லட்சம் மதிப்புள்ள பொருளை பரிசளித்த அஜித்- யாருக்கு என்ன கொடுத்துள்ளார் பாருங்க
தற்போது கதையில் குணசேகரன் தர்ஷினிக்கு திருமணம் செய்ய பல வேலைகள் செய்ய இப்போது கடைசியில் தர்ஷனுக்கு திருமணம் என கதையை மாற்றுகிறார்.
அடுத்தடுத்து விறுவிறுப்பாக கதைக்களம் சென்றாலும் கதையை கொஞ்சம் இழுக்கிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.
பாலித்தீவில் நடிகைகள்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா சமீபத்தில் பாலித்தீவு சென்றார்.
அங்கு தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியாவும் பாலித்தீவு சென்றுள்ளார்.
அங்கு கடலில் குளிப்பது, படகில் செல்வது, விலங்குகளுடன் விளையாடுவது, தண்ணீருக்குள் மூழ்குவது, பாம்பை தோளில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.