படு பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை கட்டியுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... புகைப்படங்கள் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் என நிஜத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி பேசியிருந்தது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்த தொடர் இவ்வருட பாதியில் முடிவடைந்தது.
தற்போது விரைவில் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது, சில நடிகர்கள் மாற்றம் நடக்க உள்ளது.
சத்யா
இந்த எதிர்நீச்சல் தொடரில் ஆதிரையாக நடித்த நடிகை சத்யா தனது இன்ஸ்டாவில் ஒரு ஸ்பெஷல் விஷயத்தின் புகைப்படங்களை பதிவு போட்டுள்ளார்.
என்ன விஷயம் என்றால், அவரும் அவரது கணவரும் இணைந்து பிரம்மாண்டமாக ஒரு மண்டபம் கட்டியுள்ளனர்.
மண்டபத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்த சந்தோஷ செய்தியை கூற ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
