விஜய் டிவி தொடரில் நடிக்கவந்த எதிர்நீச்சல் சீரியல் நாயகி- யார், எந்த தொடர் தெரியுமா?
எதிர்நீச்சல் தொடர்
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வருகிறது.
திருச்செல்வம் அவர்கள் இயக்கி வரும் இந்த தொடர் 400 எபிசோடுகளை எட்டிவிட்டது. அதனை கூட கேக் வெட்டி சீரியல் குழுவினர் கொண்டாடினார்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின.
இந்த தொடரில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வைஷ்ணவி.
இவர் ஜனனியின் நெருங்கிய தோழியாக இருந்து வரும் வசு ஜனனிக்கு பிரச்சனை வரும் நேரங்களில் எல்லாம் தோள் கொடுக்கும் ஒரு தோழியாகவும் குணசேகரனை தைரியமாக கேள்வி கேட்கும் ஒரு தைரியமான பெண்ணாகவும் இருந்து வருகிறார்.
அவ்வப்போது வரும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் வைஷ்ணவி இப்போது புதிய சீரீயலில் கமிட்டாகியுள்ளார்.
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.
இந்த தொடரின் புரொமோ ஷுட் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருவது சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு விஷயம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்தை பார்த்து நானே கண் கலங்கிவிட்டேன்- சீமான்