இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு... யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க
எதிர்நீச்சல்
கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள்.
என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சன் டிவி ஒரு காலத்தில் டிஆர்பியில் மாஸ் செய்த எதிர்நீச்சல் தொடர் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கிய இந்த தொடர் மீது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு வைத்தார்கள், அதை அவர் பூர்த்தி செய்திருந்தார்.
நடிகையின் பதிவு
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் தொடர் குறித்து தங்களது பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
இதில் முக்கிய நாயகியாக நடித்துவந்த மதுமிதா தனது இன்ஸ்டாவில் எதிர்நீச்சல் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகான வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இதயம் நொறுங்கிய தருணம், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் வாழ்க்கையில் அனைத்தையும் கடந்து தான் போக வேண்டும், முதலில் சன் தொலைக்காட்சிக்கு நன்றி.
இயக்குனர் திருச்செல்வம், வித்யா மேம் இருவருக்கும் எனது பெரிய நன்றி. ஜனனி என்ற கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்ததற்கு நன்றி என பெரிய பதிவு போட்டுள்ளார்.
You May Like This Video