எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா குறித்து தவறாக பரவும் தகவல்... உண்மையே இதுதானா?
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்களை பற்றி மக்கள் பரபரப்பாக பேசியுள்ளார்கள்.
அப்படி ஒரு தொடர் பற்றிய எபிசோடுகளை மக்கள் பேசியது என்றால் அது எதிர்நீச்சல் சீரியலை பற்றியும் தான்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை காட்டி ஒரு தொடர், பலருக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்த தொடர், இப்போது இது முடியப்போகிறது என்ற செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதில் நடித்துவரும் பிரபலங்களும் தொடர் முடிவுக்கு வருவது குறித்து பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
ஹரிப்பிரியா ஷோ
இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹரிப்பிரியா சன் லைவ் சேனலில் நேயர்களுக்கு பிடித் பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் முடிவுக்கு வருவதால் இந்த சேனலுக்கு தாவி விட்டாரா என சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் உண்மையில் ஹரிப்பிரியா எப்போதோ இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டாராம். கடந்த ஒரு வாரமாக தான் அவர் இந்நிகழ்ச்சியில் வருது இல்லையாம்.