கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. யார் தெரியுமா
கங்குவா
கடந்த வாரம் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தில், எதிர்நீச்சல் சீரியல் நடிகை நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், ஞானவேல் தயாரிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் 4 நாட்களில் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கங்குவா படத்தில் எதிர்நீச்சல் நடிகை
சன் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றியடைந்த சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஹேமா தயாள். இவர் கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் சூர்யாவுடன் இருக்கும் கங்குவா படத்தின் காட்சியின் புகைப்படம் இதோ..

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
