தளபதி விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. புகைப்படம் இதோ
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிட்டுள்ள நிலையில், மே 4ஆம் தேதி வெளிவரவுள்ள தேர்தல் முடிவிற்காக விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் சென்றிருந்தார். அதை தொடர்ந்து நேற்று சீரடி பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கு விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை
இந்த நிலையில், அங்கு தளபதி விஜய்யை பிரபல நடிகை கனிகா சந்தித்துள்ளார். ஆம், சீரடி கோவிலுக்கு நடிகை கனிகா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தனது சொந்த காரணங்களால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.