எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ பாருங்க
இயக்குநர் திருசெல்வம்
சன் டிவியில் பட்டையை கிளப்பி வரும் எதிர்நீச்சல் சீரியலை பிரபல இயக்குநர் திருசெல்வம் இயக்கி வருகிறார். முதல் பாகத்திற்கு எப்படி மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தார்களோ, அதே போல் தற்போது இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை இயக்குவது மட்டுமின்றி, அதே போல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் திருசெல்வம். இவர் கடந்த 2002ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒளி சீரியலில் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
இதன்பின், தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் இயக்குநராக சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் சீரியலே மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தேடி தந்தது. இதன்பின் மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி என மக்கள் மனதை தொடும் வகையில் பல சீரியல்களை இயக்கினார்.
திருச்செல்வம் மனைவி
இயக்குநர் திருச்செல்வத்தின் மனைவி பெயர் பாரதி. இவர் ஒரு சிவில் இன்ஜினியர் ஆவார். இயக்குநர் திருச்செல்வம் பெரிதாக தனது மனைவியுடன் பொது விழாக்களில் கலந்துகொள்வதை நம்மால் பார்த்திருக்க முடியாது.
இந்த நிலையில், தனது மனைவி பாரதியுடன் இயக்குநர் திருச்செல்வம் எடுத்துக்கொண்ட Rare புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..