புதிய படத்தில் கமிட்டாகியுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா இசை.. என்ன படம் தெரியுமா?
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் எதிர்நீச்சல்.
கோலங்கள் தொடரை தொடர்ந்து திருச்செல்வம் அவர்கள் இயக்கிய இந்த தொடரில் கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்பிரியா மற்றும் மதுமிதா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் டிஆர்பியில் குறைந்து கொண்டே வர திடீரென முடிக்கப்பட்டது. ஆனால் தொடரின் கதையில் மாற்றம் செய்து 1000 எபிசோடுகள் வரை கொண்டு வந்திருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ள ரம்பா மற்றும் விஜய்.. நடிகை குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஸ்
புதிய படம்
இந்த தொடர் மூலம் நந்தினியாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஹரிப்பிரியா இசை. தொடரை முடித்த கையோடு தனது நீண்டநாள் ஆசையான நடன பள்ளியை தொடங்கியுள்ளார்.
அந்த தகவலை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் ஹரிப்பிரியா இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இயக்குனர் ஜெயவேல் முருகன் இயக்கும் வருணன் படத்தில் ஹரிப்பிரியா ஒப்பந்தமாகியுள்ளார். யாக்கை பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்களாம்.

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
